வேகமாக வந்த ரயில்! தண்டவாளத்தில் நின்ற லொறி.. நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் டேங்கர் டிரக் லொறி மீது ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Edmonton கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் தான் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு நடந்துள்ளது.

இந்த விபத்தில் டிரக்கில் இருந்த ஓட்டுனர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், தண்டவாளத்தில் ரயில் வந்த போது டிரக் லொறி அங்கே நின்றிருக்கலாம் என கருதுகிறோம் என கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரின் பெயர் மற்ற இன்னபிற விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Scott Neufeld/CBC

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers