App என்னை கைபாவையாக பயன்படுத்தி கொலை செய்துவிட்டது- கொலைகாரனின் பதில்

Report Print Gokulan Gokulan in கனடா

கனடாவில் 6 பேரை கொலை செய்த uber கார் ஓட்டுநருக்கு பரோல் இல்லாமல், வாழ்நாள் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் 2016ஆம் ஆண்டில் uber கார் ஓட்டுநரான ஜாசன் டால்டன் 6 பேரை கொலை செய்தார்.

முதலில் பெண் ஒருவரை அவரின் குழந்தைகள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டார். அதில் அந்த பெண் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார்.

தொடர்ந்து அப்பாவையும், மகனையும் துப்பாக்கியால் சுட்டதில், அவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மூன்றாவது நபராக கார் டீலரை சுட்டுதள்ளினார், அவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிழைத்துக்கொண்டார்.

ஜாசன் டால்டன்

தொடர்ந்து ஒரு உணவகத்திற்குள் சென்று அங்கிருந்த ஐந்து பேரை சரமாரியாக சுட்டு தள்ளினார். இதில் 14வயது சிறுமி மட்டும் காயத்துடன் தப்பித்து கொண்டார். மற்றவர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இந்த சம்பவம் அனைத்தையும் கனடாவின் முக்கிய நகரத்தில் 241 கிலோமீட்டர் தூரத்தில் 5மணி நேரத்திற்குள் நடத்தி முடித்து விட்டார் ஜாசன் டால்டன்.

தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் uber App என்னை கைபாவையாக பயன்படுத்தி இந்த கொலைகளை செய்தது என்று கூறியுள்ளார்.

ஜாசன் குறித்து uber நிர்வாகத்தில் விசாரித்ததில் அதற்கு முன் எந்தவித குற்றசாட்டுகளும் இன்றி பணியாற்றியவர் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் கொலை செய்தது குறித்து வருந்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அந்நாட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதன்படி ஜாசன் டால்டன் தனது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் அவருக்கு பரோல் போன்ற எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers