கனடாவில் கோர விபத்து: மூவர் பலி, 23 பேர் காயம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று பேருந்து நிறுத்தத்தில் இருந்த பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.

ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள்.

Westboro பேருந்து நிறுத்தத்தில் இந்த விபத்து நேரிட்ட அந்த விபத்தில், பேருந்தின் மேல் தளம் சேதமடைந்ததால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க இயலாமல் சிக்கிக் கொண்டனர்.

அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இந்த விபத்துநேரிட்ட நிலையில், விபத்தைக் கண்டவர்கள் ஏராளமானோர் அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், அந்த பேருந்து Westboro நிறுத்தத்தில் உள்ள பிளாட்பாரத்தில் மோதியதில் பேருந்தில் இருந்தவர்கள், பிளாட்பாரத்தில் நின்றவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்திருந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவா மேயரான Jim Watson, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers