வெளிநாட்டில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட கனேடியர்: சதி என்று குமுறும் குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

சீனாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய கனேடியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் Liaoning பிராந்திய நீதிமன்றம் கனேடியருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் வழக்கில் 36 வயதான ராபர்ட் லாய்ட் என்பவர் சீனாவின் Liaoning பிராந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தமது தண்டனை காலத்தை குறைக்கும்படி கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் ராபர்ட் லாய்ட்.

ஆனால் குறித்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி போதை மருந்து கடத்தல் தொடர்பாக ராபர்ட் லாய்ட்டின் பங்கு குறித்து மேலதிக ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும்,

சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் இவருக்கு இருக்கும் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் ராபர்ட் லாய்ட் தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு மேற்கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராபர்ட் லாய்ட் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவரது உறவினர், அவர் மீதான தண்டனை தீர்ப்பும் விசாரணையும் தங்களுக்கு சந்தேகத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான ராஜாங்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்