தண்டவாளத்தில் காருடன் சிக்கிய தாயும் மகளும்! வேகமாக வந்த ரயில்: திகில் நிமிடங்கள்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஒரு பெண் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, அவரது கார் தண்டவாளங்களின் நடுவில் சிக்கிக் கொண்டது.

சரியாக அந்த நேரம் பார்த்து சரக்கு ரயில் ஒன்று வர, அடுத்து நடந்த திடுக்கிடும் சம்பவத்தை அச்சத்துடன் விவரிக்கிறார் அந்த பெண்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து Quebecக்கு வேலை தேடி சமீபத்தில் குடிபெயர்ந்த Amanda Collins, தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக, மகளுடன் காரில் பயணித்திருக்கிறார்.

அப்போது வழியில் வரிசையாக இருந்த தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டி வந்திருக்கிறது.

முதல் தண்டவாளத்தைக் கடந்துவிட்ட நிலையில், இரண்டாவது தண்டவாளத்தைக் கடக்க முயலும்போது காரின் சக்கரம் தண்டவாளத்தில் நிறைந்திருந்த பனியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

அப்போது தொலைவில் ரயில் வருவதைக் கண்ட Amanda, காரை முன்னோக்கி நகர்த்தும் முயற்சி தோல்வியுறவே, ரிவர்ஸ் எடுக்க முயற்சித்திருக்கிறார்.

கார் பின்னோக்கியும் செல்லாமால், காரின் சக்கரங்கள் மட்டுமே வேகமாக சுழன்று கொண்டிருக்க, ரயில் நெருங்கி வர, Amandaவின் மகள் பயந்து அலற, தன்னால் அந்த சம்பவத்தை மறக்க இயலவில்லை என்கிறார் அவர்.

வேறு வழியில்லாமல் காரை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு தாயும் மகளும் காரிலிருந்து வெளியேறி ஓடவும், ரயில் கார் மீது மோதவும் சரியாக இருந்திருக்கிறது.

இதற்குமுன் Amandaவின் மகள் எதற்கும் இப்படி ரியாக்ட் செய்து அவர் பார்த்ததில்லை என்பதால், நிச்சயம் அவரது மகளால் வாழ்நாள் முழுவதும் அந்த சம்பவத்தை மறக்க இயலாது என்றே தோன்றுகிறது.

Quebecஇல் விலைவாசி சற்று குறைவு என்பதால்தான் அங்கு குடியேறியது Amandaவின் குடும்பம்.

இந்த நிலையில், அவரது கார் மிகவும் மோசமாக பாதிக்கப்பட, அவரது இன்சூரன்ஸ் ஒரு

புதிய காரை வாங்கும் அளவிலும் இல்லாததால் மிகவும் வருத்தத்திற்குள்ளாகியிருக்கிறார் Amanda.

கார் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது கனடாவைப் பொருத்தவரையில் கடினம் என்பதால், Amandaவின் நண்பர்கள் சிலர் அவருக்கு கார் ஒன்றை வாங்கிவதற்காக பணம் திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

கார் போனது வருத்தம்தான் என்றாலும், தானும் தன் மகளும் இன்று உயிரோடு இருப்பதற்காக தான் நன்றியுடையவளாக இருப்பதாக தெரிவிக்கிறார் Amanda.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers