அம்மா இல்லாம பசங்க கஷ்டப்படுறாங்க.. கண்ணீரில் கணவன்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணின் கார் மீது தனது காரை ஏற்றி கொன்ற நபர் மீது பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் லிசா ஜோர்ப் (50). இவர் கடந்த அக்டோபர் மாதம் காரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் வேறு காரில் வந்த ரொனால்டு பிளம்மர் (56) என்பவரின் கார் லிசாவின் கார் மீது வேகமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே லிசா உயிரிழந்தார். படுகாயமடைந்த ரொனால்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிர் பிழைத்தார்.

லிசாவின் இழப்பு குறித்து அவர் கணவர் டேவ் கூறுகையில், லிசா இறந்ததை எங்களின் இரண்டு பிள்ளைகளால் ஜீரணிக்க முடியவில்லை.

எப்போதும் சிரித்த முகத்துடன் லிசா இருப்பார், மற்றவர்கள் மீது அக்கறையுடன் அவர் இருப்பார் என கூறியுள்ளார்.

இதனிடையில் மருத்துவமனை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரொனால்டு மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers