கனடா தூதரை அதிரடியாக நீக்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: காரணம் என்ன?

Report Print Raju Raju in கனடா

சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார் மெக்கலன்.

இதனை தொடர்ந்து தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஜஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதவியிலிருந்து விலகும்படி மெக்கலனை கேட்டுகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏன் என்று சொல்லவில்லை.

உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாவெய் உள்ளது.

இதன் அதிகாரி மெங் வான்ட்சொவை அமெரிக்கா கேட்டுகொண்டதற்கான கனடா கைது செய்தது. இதனால் சீனா கனடா மீது கோபம் கொண்டது. இரு நாட்டு உறவுகளும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஹுவாவெய் அதிகாரி மெங் வான்ட்சொ கைது விவகாரம் தவறான செயல் என்ற தொனியில் ஜான் மெக்கலன் கடந்த செவ்வாய்க்கிழமை விமர்சித்து இருந்தார்.

ஆனால், அடுத்த நாளே தான் தவறாக பேசிவிட்டதாகவும், தனது பேச்சு குழப்பத்தை விளைவித்ததற்காக மன்னிப்பும் கோரினார்

இந்நிலையில் தான் அவரை ஜஸ்டின் நீக்கியுள்ளார்.




மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers