உலகிலேயே சிறந்த வாழ்க்கை தரத்தில் முதலிடம் பிடித்த கனடா: தமிழர்கள் கூறுவது என்ன?

Report Print Deepthi Deepthi in கனடா

அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு மூன்றாமிடத்தை பெற்றுள்ள கனடா, சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

செலவினம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஊதியத்தில் பாலின சமவுரிமை, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கனடா, வாழ்க்கை தரத்தில் உலகின் சிறந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது" என்று அந்த கருத்து கணிப்பு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்துவரும் அஸ்வின் பிபிசியிடம் கூறியதாவது, னடாவை நினைக்கும்போது எதிர்மறையான விடயங்களை தவிர்த்து இயற்கை, சிறந்த வாழ்க்கை போன்றவை நமக்கு நினைவுக்கு வருவதுதான் அதன் சிறப்பிற்கு உதாரணம்.

மக்களின் செயல்பாடு முதல் கல்வி நிறுவனங்களின் தரம் வரை பெரும்பாலான விடயங்கள் என்னை வியக்க வைக்கும் வகையில் உள்ளன" என்று கூறுகிறார் மதுரையை பூர்விகமாக கொண்ட அஸ்வின்.

கல்விக்காக கனடாவுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிருக்கும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, பணிக்காக சென்று கனேடிய குடியுரிமை வாங்கிய தமிழர்களும் அதிக எண்ணிக்கைகள் இருக்கிறார்கள்.

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த சமையற்கலை நிபுணரான சிவா, தான் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து ஏழாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் திருவண்ணாமலையில் இருந்து கனடா வந்ததாகவும், தற்போது கனேடிய குடியுரிமையே வாங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.

கனடாவில் இருக்கும் வாய்ப்புகளை எண்ணி கடுமையாக உழைத்து முதலில் நிரந்தர வசிப்புரிமையையும், பிறகு கடந்தாண்டு கனேடிய குடியுரிமையையும் பெற்றுவிட்டேன். எனது வேலை மட்டுமின்றி, குழந்தையின் கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருதும்போது கனடாவிலுள்ள வாழ்க்கை தரம் நம்பிக்கை அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers