ஐ.நா முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்! இலங்கை வீரர்கள் இருவர் பலி, ஆறு பேர் காயம்

Report Print Balamanuvelan in கனடா

மத்திய மாலியில் உள்ள நகரமொன்றில் அமைதிப்படையினருடைய முகாம் ஒன்றின்மீது வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு, ஆறுபேர் காயமடைந்தனர்.

மாலியில் முகாமிட்டுள்ள blue helmets என்னும் கனேடிய அமைதிப்படையினர் காயமடைந்தவர்கள் ஐவரை மீட்டு, ஹெலிகொப்டரில் பறக்கும்போதே சிகிச்சை அளித்தனர்.

மத்திய மாலியில் உள்ள Douentza நகருக்கருகில், 250 அமைதிப்படை வீரர்களும் எட்டு ஹெலிகொப்டர்களும் முகாமிட்டுள்ளன.

ஆகஸ்டு மாதம் தங்கள் ஆபரேஷன்களை தொடங்கியது முதற்கொண்டு இதுவரை ஏழு மீட்பு நடவடிக்கைகளை கனேடிய அமைதிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இவற்றில் கடந்த வாரம் வடக்கு மாலியில் அமைந்துள்ள ஐ.நா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அடங்கும்.

அந்த தாக்குதலில் Chadஐச் சேர்ந்த 10 அமைதிப்படையினர் கொல்லப்பட்டதோடு சுமார் 12 பேர் காயமடைந்தனர்.

கனேடிய வீரர்கள் சுமார் 15 அமைதிப்படையினரை சம்பவ இடத்திலிருந்து சுமந்து சென்றதையடுத்து, இதுவரை நடந்ததிலேயே அன்றையதினம்தான் மிகவும் பரபரப்பான தினமாக கருதப்பட்டது.

இந்நிலையில், வெள்ளியன்று நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உயிரிழந்தோருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடந்ததும் உதவி கோரியதையடுத்து கனேடிய அமைதிப்படையினர் விரைவாக ஹெலிகொப்டர்களில் வந்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்து உதவியதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers