பள்ளித்தோழியின் மகளை சீரழித்த நபர்: சொந்த மகளே பாதிக்கப்பட்ட சோகம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது பள்ளித்தோழியின் 14 வயது மகளையே சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த Patrick Claude Boucher (41) பல ஆண்டுகளுக்குப்பின் தனது பள்ளித்தோழியை சந்தித்தார்.

தத்தம் துணைகளை பிரிந்து வாழும் இருவரும், தங்கள் பிள்ளைகள் நான்கு நாட்கள் Patrick வீட்டிலும், நான்கு நாட்கள் அவரது தோழி வீட்டிலும் தங்குவது என்றும், இதனால் பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கருதி முடிவு செய்தனர்.

Patrickஇன் வீட்டில் அவரது தோழியின் 14 வயது மகள் தங்கும்போது, அந்த சிறுமிக்கும் Patrickகும் இடையே தகாத உறவு உருவாகியிருக்கிறது.

முதலில் கைகளைப் பிடித்துக் கொள்வது, முத்தமிடுவது, அணைத்துக் கொள்வதில் தொடங்கிய பழக்கம், ஒரு ஆண்டுக்குப்பிறகு பாலுறவில் முடிந்திருக்கிறது.

Patrick அந்த சிறுமியுடன் பாலுறவு கொள்வதை பல முறை வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் அந்த பெண்ணுடன் சேர்ந்து இருவருமாக அந்த வீடியோக்களை பார்த்திருக்கிறார்கள்.

பலமுறை அவளுக்கு மதுபானம் கொடுத்திருக்கிறார் Patrick. பாலுறவு கொள்ளும் பழக்கம் ஏற்பட்டதும், Patrickஇன் அறையிலேயே தங்க ஆரம்பித்திருக்கிறாள் அந்தபெண்.

இருவரும் சேர்ந்து குளிப்பதும் தூங்குவதுமாக உல்லாசம் அனுபவித்திருக்கிறார்கள் இருவரும். அவளை திருமணம் செய்வதாக திட்டமிட்டிருப்பதாக Patrick அந்த பெண்ணிடம் தெரிவிக்க, அதை நம்பிய அந்த பெண்ணும், திருமணத்திற்கு அடையாளமாக எலாஸ்டிக்கினால் ஆன நிச்சயதார்த்த பாண்ட் ஒன்றை கையில் அணிந்துகொண்டிருக்கிறாள்.

ஒரு நாள் தனக்கும் Patrickகும் இடையில் உள்ள உறவு குறித்து தான் வருந்துவதாக அந்த பெண் எழுதிய கடிதம் தற்செயலாக அவளது தாயாரின் கையில் கிடைக்க, அதற்குப் பிறகுதான் விடயம் வெளியில் வந்திருக்கிறது.

தன் தவறுகளை ஒப்புக்கொண்ட Patrickகு 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையில் தனது தந்தையையும் அந்த பெண்ணையும் படுக்கையில் சேர்த்து பார்க்க நேரிட்ட Patrickஇன் மகள் அவரிடம் சண்டையிட, அவளுடன் பழகுவதை விட முடியாது என Patrick மறுக்க, வீட்டைவிட்டு வெளியேறிய Patrickஇன் மகள் கடும் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, தற்கொலை முயற்சி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers