25 டொலர் செலவு செய்தால் 1.7 மில்லியன் டொலர் குடியிருப்பை வெல்லலாம்: கனடாவில் சம்பவம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் அரண்மனை போன்ற தமது குடியிருப்பை விற்பனை செய்ய பெண்மணி ஒருவர் வித்தியாசமான திட்டத்தை முயற்சித்துள்ளார்.

இவரது முயற்சிக்கு கனேடிய மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

ஆல்பர்ட்டாவில் உள்ள Millarville பகுதியில் குடியிருப்பவர் ஆலா வாக்னர். இளமை காலத்தில் அரண்மனை போன்ற குடியிருப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார் ஆலா.

ஆனால் வயதான போது அவருக்கு அந்த குடியிருப்பின் தேவை இல்லாமல் போனது. இதனையடுத்து அந்த குடியிருப்பை விற்றுவிட்டு தமது தேவைக்கு ஏற்ற சின்னதாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து தமது குடியிருப்பின் விலையை 1.7 மில்லியன் டொலர் என குறிப்பிட்டு பட்டியலில் சேர்த்துள்ளார்.

ஆனால் எவரும் அந்த அளவுக்கு தொகை செலவிட்டு குறித்த குடியிருப்பை வாங்க முன்வரவில்லை.

இதனால் தமது திட்டத்தை மாற்றிக் கொண்ட ஆலா, கடிதம் எழுதுங்கள் குடியிருப்பை வெல்லுங்கள் என விளம்பரம் செய்துள்ளார்.

5 படுக்கை அறை கொண்ட அந்த குடியிருப்பை வெல்லும் போட்டியில் கலந்துகொள்ள, 25 டொலர் செலுத்தி முதலில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அந்த குடியிருப்பை ஏன் ஆசைப்படுகிறீர்கள் எனவும் காரணத்தை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுத வேண்டும்.

இதில் சிறப்பான கடிதம் எழுதுவோருக்கு அந்த குடியிருப்பு வழங்கப்படும். ஆனால் போட்டியானது 1.7 மில்லியன் டொலர் நிதி சேரும்வரை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த குடியிருப்பை வெல்ல பலர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers