இலங்கையர் உள்ளிட்ட 8 பேர் கொடூர கொலை: கனடாவை உலுக்கிய சைக்கோ கொலைகாரனின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவை நீண்ட பல ஆண்டுகளாக வேட்டையாடிய தொடர் கொலைகளின் உண்மை நிலை வெளியானதில் நாடு முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

புரூஸ் மெக் ஆர்தர் என்ற 67 வயது நபரின் ஒப்புதல் வாக்குமூலமே இந்த கொலைகளின் பின்னணியை கண்டறிய விசாரணை அதிகாரிகளுக்கு உதவியுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை டொரொண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதியில் இருந்து மாயமான 8 நபர்களை கொலை செய்ததும், அவர்களின் உடல் உறுப்புகளை துண்டித்து மறைவு செய்ததும் தாம் என புரூஸ் மெக் ஆர்தர் விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரூஸ் மெக் ஆர்தரின் நண்பரான 49 வயது ஆண்ட்ரூ கின்ஸ்மேன் மாயமாகியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஆண்ட்ரூவின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரது குடியிருப்பின் நாட்காட்டியில் புரூஸ் என அவர் குறிப்பிட்டிருந்தது பொலிசாரின் பார்வையில் சிக்கியுள்ளது.

இதனையடுத்து சந்தேகம் கொண்ட பொலிசார் புரூஸ் ஆர்தரை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

கனடாவில் பிரபலமான நில அளவையாளராக பணியாற்றி வந்த புரூஸ் ஆர்தர் தமது 40 வயது வரை தனது பாலியல் நிலை குறித்து எவருடனும் பகிர்ந்து கொண்டதில்லை என கூறப்படுகிறது.

1997 ஆம் ஆண்டு திடீரென்று ஒருநாள் மனைவியையும் தமது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு டொரொண்டோவில் குடியேறியுள்ளார்.

பின்னர் டொரொண்டோவில் உள்ள ஒருபாலின குழுக்களில் இணைந்துள்ளார். 2001 ஆம் ஆண்டு ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியதாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

ஆனால் மன்னிப்பு கோரியதால் சிறை தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். இதன் பின்னரே இலங்கையரான 40 வயது ஸ்கந்தராஜ் நவரத்தினம் உள்ளிட்ட 8 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் உறவில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் பொலிசாரிடம் சிக்கியுள்ளது.

மட்டுமின்றி புரூஸ் கொலை செய்ய பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

துண்டு துண்டாக நொறுக்கப்பட்ட 8 பேரின் சடலங்களையும் பொலிசார் புரூஸின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers