பிட்காயின் சேவை மையத் தலைவர் திடீர் மரணம்: அந்தரத்தில் 1360 கோடி?

Report Print Kavitha in கனடா

கனடாவைச் சேர்ந்த ஒரு கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் சி.இ.ஓ இறந்து போனதால் அவரது கணக்கில் உள்ள 1360 கோடி பணத்தினை எடுக்க முடியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

கனடாவில் உள்ள வான்கூவர் நகரைச் சேர்ந்த ஜெரால்டு காட்டன்( 30 வயது) அவர் குடல் வீக்க நோயினால் இந்தியாவில் இறந்துபோனார்.

இவர், டிஜிட்டல் கரன்சி அல்லது மெய்நிகர் பணம் என அழைக்கப்படும் பிட்காய்ன் உள்பட பல்வேறு நிதி பரிமாற்ற சேவைகள் வழங்கும் மையத்தினை நடத்தி வந்துள்ளார்.

குவாட்ரிகா சி எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ஜெரால்டு காட்டன் தனது மடிக்கணினியில் பராமரித்து வந்தார்.

மடிக்கணினியின் பாஸ்வேர்டு ஜெரால்டுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவர் இல்லாத நிலையில் 190 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டாளர்களின் பணம், பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் முற்றிலுமாக முடங்கி விட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பரில் ஜெரால்டு இந்தியாவிற்கு ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை திறப்பதற்காக வந்தபோது அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவி கூறுகிறார்.

அதுமட்டுமின்றி குறித்த விவகாரம் தொடர்பாக அவரது நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் அந்நாட்டில் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers