நான் இறந்து போனேன்! ஒரு சுவாரஸ்ய பெண்மணி குறித்த செய்தி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி குறித்து ஒரு வித்தியாசமான அறிவிப்பு வெளியாகியிருந்தது. அது ஒரு மரண அறிவித்தல்.

அதில் என்ன விசேஷம்?

அந்த மரண அறிவித்தலை தானே எழுதியிருந்தார் ஒண்டாரியோவைச் சேர்ந்த Sybil Marie Hicks.

தனது 82ஆவது வயதில் பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி Sybil இறந்த அன்று, அவரது மரண அறிவித்தல் வெளியானது.

ஒப்புக் கொள்வதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, ஆனால் என்ன செய்வது, நான் இறந்து போனேன்... என்று தொடங்கும் வித்தியாசமான அந்த மரண அறிவித்தல் ஏராளமானோரை ஈர்த்தது.

எனது மூத்த மகள் பிரெண்டா அருகில் இருக்க, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி காலை 8.20 மணியளவில் எனது உயிர் அமைதியாக பிரிந்தது என்று தொடர்கிறது அந்த மரண அறிவித்தல்.

இறந்தும் தன் நகைச்சுவை உணர்வால் தன் குடும்பத்தாரை சிரிக்க வைத்த Sybilஇன் மரண அறிவித்தல் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

அந்த அறிவித்தலில் தனது குடும்பத்தாருக்கும் முக்கியமாக பேரக்குழந்தைகளுக்கும் தனித்தனியே தனது அன்பைத் தெரிவித்துள்ளார் Sybil.

அவரது செல்லப்பேத்திகளில் ஒருவரான Chloe, இது எனது பாட்டிதான், ஆனால் என்ன, எல்லார் பெயரையும் சரியாக எழுதிவிட்டு என் பெயரை மட்டும் Choe என்று எழுத்துப் பிழையுடன் எழுதி விட்டார்கள் என செல்லப்பாட்டி என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers