தாய்ப்பாலுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா? தாய்மார்களுக்காக குழந்தை பெற்ற பெண் வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்

Report Print Santhan in கனடா

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பிறந்த பின் வயிற்றில் ஏற்படும் தழும்புகள் தாய்பாலை வைத்து தேய்த்தால் சரியாகிவிடுவதாக கூறியுள்ளார்.

கனடாவின் Alberta பகுதியைச் சேர்ந்தவர் Chantelle Clarke. கடந்த டிசம்பர் மாதம் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் Chantelle Clarke தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் 11,000 ஷேர்ஸ் மற்றும் ஏகப்பட்ட லைக்ஸ் என வைரலாகி வருகிறது.

பொதுவாகவே குழந்தை பிறந்தால் பெண்களின் வயிற்றுப் பகுதியில் வரி போன்ற ஒரு தழும்பு இருக்கும் என்று கூறுவார்கள். அது அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது.

இந்நிலையில் Chantelle Clarke தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு எப்படி வயிற்றுப்பகுதியில் ஒரு வித தழும்பு இருக்குமோ அதே போன்று எனக்கும் இருந்தது.

அப்போது நான் சாதரணமாக தன்னுடைய தாய் பாலை எடுத்து என்னுடைய வயிற்றின் ஒரு பகுதியில் தேய்த்தேன், அதன் பின் சிறிது நேரம் காய விட்டு, தன்னுடைய சட்டையால் துடைத்தேன்.

இதே போன்று இப்போது வரை மூன்று வாரங்கள் செய்தேன். அதில் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது. வயிற்றுப் பகுதி தழும்புகள் மிகவும் சிவப்பாக இருந்து, தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறியுள்ளன. மறைந்து கூட விடுகின்றன.

இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் ஏராளமான தாய்மார்கள் இதைப் பற்றி தெரியாமல் இருக்கலாம், அதற்காகவே நான் கூறுகிறேன். இதை நீங்கள் பொய் என்று கூட நம்பலாம், ஆனால் டிரை செய்து பாருங்கள் இது உண்மை, ஆனால் 10 சதவீதம் என்னால் உறுதி தர முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தழும்புகள் மறைந்தது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...