கனடாவில் தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி வீடு.. பால்கனியில் இருந்து கீழே குதித்த மக்கள்.. மூவர் பலி

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து எரிந்த நிலையில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Longueuil நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்தனர்.

வீரர்கள் தீயை தொடர்ந்து அணைத்தப்படி இருந்த நிலையில் உள்ளிருந்த பலரும் மீட்கப்பட்டனர்.

பலர் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது.

மீட்கப்பட்ட மூன்று பேர் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

தகவலின்படி காயம் காரணமாக 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தீயை அணைக்க 80 தீயணைப்பு வீரர்கள் போராடிய நிலையில் சனிக்கிழமை மதியம் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் யாரோ செய்த தவறால் தான் தீப்பிடித்துள்ளது.

கெட்ட நோக்கத்துடன் யாரும் தீயை பற்றவைக்கவில்லை.

தீப்பிடித்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers