இலங்கை தமிழர் உட்பட எட்டுபேரின் நினைவேந்தல் நிகழ்வு! கனடாவில் அனுசரிப்பு

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் சீரியல் கில்லர் புரூஸ் மெக் ஆர்தரால் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்களான கிருஷ்ணகுமார் கனகரத்னம், ஸ்கந்தராஜ் நவரத்னம் உட்பட எட்டுபேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது.

கடந்த வெள்ளியன்று எட்டு பேரைக் கொன்ற ஓரினச்சேர்க்கையாளனான மெக் ஆர்தருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து டொராண்டோவிலுள்ள மெட்ரோபோலிட்டன் கம்யூனிட்டி ஆலயத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்ச்சியில், கொல்லப்பட்டவர்கள் சார்பாக எட்டு மற்றும் மெக் ஆர்தரால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒன்று என மொத்தம் ஒன்பது மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன.

ஆலயத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டாலும், உயிரிழந்தவர்களில் தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படியான பிரார்த்தனைகளும் ஏறெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் வசூலான பணம் எய்ட்ஸ் தடுப்பு அமைப்பு ஒன்றிற்கு வழங்கப்பட உள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கனகரத்னம், ஸ்கந்தராஜ் நவரத்னம் உட்பட எட்டுபேரின் கொலைகளுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ள மெக் ஆர்தருக்கு குறைந்தது 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers