கனேடிய சிறுமி படுகொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்: கணவரை மனைவியே சிக்க வைத்தது எப்படி?

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் இந்திய வம்சாவளி சிறுமி சொந்த தந்தையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலை வழக்கு தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 41 வயது ரூபேஷ் ராஜ்குமார் மீது முதல் நிலை கொலை வழக்கு பதிந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரியா ராஜ்குமார், சம்பவத்தன்று தமது தந்தை ரூபேஷ் ராஜ்குமாருடன் தமது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் உரிய காலத்தில் அவர் குடியிருப்பு திரும்பாததை அடுத்து அவரது தாயார் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்த பொலிசார் சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ரூபேஷ் ராஜ்குமாருக்கு சொந்தமான ஹேன்சன் ரோட் நார்த் மற்றும் க்ராஃபோர்ட் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சிறுமி ரியா ராஜ்குமாரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி ரியா தமது தந்தையால் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் துரிதமாக செயல்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி ரூபேஷிடம் இருந்து தமது மனைவிக்கு எச்சரிக்கை தகவலும் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொலிசார் சமூக வலைதளங்களில் ரியா மற்றும் ரூபேஷ் ராஜ்குமார் தொடர்பில் தகவல் வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து உதவி கோரியுள்ளனர்.

ரூபேஷ் ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த விவகாரம் தொடர்பில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரியா துடிப்பான சிறுமி என கூறும் உறவினர்கள், அவள் போகும் இடமெல்லாம் புன்னகையை பகிர்ந்து செல்பவள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ரூபேஷ் ராஜ்குமாரை கைது செய்யும்போது அவர் காயங்களுடன் காணப்பட்டதாகவும், தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் எனவும்,

ஆனால் அந்த காயங்களுக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்