மருத்துவமனையில் மனைவி இறந்த அதே நேரத்தில் இறந்த கணவன்! வாழ்விலும் சாவிலும் பிரியாத அகதி தம்பதி

Report Print Balamanuvelan in கனடா

காதலுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த டொராண்டோவைச் சேர்ந்த ஒரு தம்பதி, வெவ்வேறு இடங்களிலிருந்தாலும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், இதுதான் உண்மையான காதல் என உலகுக்கு கூவி அறிவித்துள்ளது.

இளம் வயதில் தத்தம் துணைகளை சாகக் கொடுத்த பத்ருவும் குல்ஸல் நாஞ்சியும் உகாண்டாவிலிருந்து தப்பி கனடாவுக்கு அகதிகளாக வந்தபோது சந்தித்தனர். தன்னைப்போலவே நிர்க்கதியாக இரண்டு குழந்தைகளுடன் நின்ற குல்ஸமை 1978ஆம் ஆண்டு கைப்பிடித்தார் பத்ரு.

அப்புறம் அவரது கையை விடவே இல்லை பத்ரு, அப்படி ஒரு காதல் அவருக்கு குல்ஸம் மீது.

Thorncliff வீட்டில் தங்கள் குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்கிய அந்த தம்பதி, வயதான நிலையிலும் அந்த வீட்டின் ஒரு அறையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆளுக்கொரு சோபாவில் அமர்ந்திருப்பார்கள்.

சமீபத்தில் குல்ஸம் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவர குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.

இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது இறுதி மூச்சை குல்ஸம் விடவிருக்கும் நிலையில், பத்ருவிடம் சென்று அவரது மனைவியைக் காண வருமாறு அழைக்க, அவரோ என் மனைவி இங்குதான் எங்கள் அறையில் இருக்கிறார் என்று கூறி வீட்டை விட்டு வர மறுத்து விட்டார்.

மருத்துவமனையில் தன் மகன் கைகளில் குல்ஸம் உயிரைவிட, அம்மா இறந்த செய்தியை அப்பாவிடம் எப்படி தெரிவிப்பது என பயந்தவாறே அவரது அறைக்குள் சென்றால், அவரை அவரது சோபாவில் காணவில்லை.

அவர் எங்கே என்று தேடினால், தனது மனைவி வழக்கமாக அமரும் சோபாவின் அருகே, கீழே அமர்ந்து குல்ஸம் அமரும் இடத்தில் தலை சாய்த்து அமர்ந்திருக்கிறார் பத்ரு. மெதுவாக அவர் அருகே சென்று வரைத் தொட்டால், சினிமாவில் வருவதுபோல் அவர் தலை சாய்கிறது.

ஆம், தன் மனைவி மருத்துவமனையில் உயிரிழந்த அதே நேரத்தில் பத்ருவும் உயிரிழந்திருந்தார்.

ஏற்கனவே தங்கள் பெற்றோரில் காதலை நன்கறிந்திருந்த பிள்ளைகள், அவர்களது காதலின் ஆழத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

வாழ்விலும் சாவிலும் பிரியாத பத்ரு குல்ஸம் தம்பதியரை ஒரே இடத்தில் அடக்கம் செய்து அவர்களது காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள் அவர்களது பிள்ளைகள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers