தந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் சொந்த தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர்.

11 வயதான சிறுமி ரியா ராஜ்குமார் அவரது தந்தையான ரூபேஷ் ராஜ்குமாரின் குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்தன்று ரியாவின் பிறந்த நாள் என்பதால் தந்தை ரூபேஷுடன் ரியா வெளியே சென்றுள்ளார்.

ஆனால் இரவு 7 மணியை தாண்டியும் அவர் குடியிருப்பு திரும்பாததை அடுத்து ரியாவின் தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு பிராந்திய பொலிசார் ஆம்பர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக ரியாவின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ரியாவின் தாயார் அளித்த தகவல்கள் குற்றவாளியை நெருங்க தங்களுக்கு உதவியதாக கூறும் பொலிசார்,

ரூபேஷை கைது செய்து அவர் மீது முதல் நிலை கொலை குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்