காஷ்மீர் குண்டுவெடிப்பு சமயத்தில் தமிழகம் வந்த கனடா சுற்றுலா பயணிகள்: மேற்கொண்ட நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in கனடா

உலக அமைதி வேண்டி கனடா சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கோவிலில் யாகம் செய்துள்ளார்கள்.

கனடாவிலிருந்து மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க 27 சுற்றுலாப்பயணிகள் குழுவாக வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இருதினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட கனடா சுற்றுலாப் பயணிகள் உலக அமைதி வேண்டி இந்து முறைப்படி வழிபட வேண்டும் என தங்கள் விருப்பத்தை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்தக் குழுவில் உள்ள எழுத்தாளர் ஒருவர் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கனடா சுற்றுலாப் பயணிகள் 27 பேரும் இந்து முறைப்படி மாலை அணிவித்துக்கொண்டு யாகத்தில் கலந்துகொண்டனர்.

இந்த யாகத்தின் மூலம் தங்களுக்கு மன அமைதி கிடைத்திருப்பதாகவும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்