கனடா தீ விபத்தில் கொல்லப்பட்ட 7 சகோதரர்களின் உடல் நல்லடக்கம்: கண்ணீருடன் பங்கேற்ற பொதுமக்கள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் பகுதியில் தீ விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 7 சகோதரர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் பல சமுதாயத்தை சேர்ந்த 2,000 பொதுமக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிரியாவில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அகதியாக கனடாவில் குடியேறிய இப்ராஹிம் பர்ஹோ என்பவரது பிள்ளைகளான 14 வயது அகமது, 12 வயது ரோலா, 9 வயது மொஹமத், ஓலா (8), ஹலா (3), ராணா (2) மற்றும் நான்கு மாத குழந்தை அப்துல்லா ஆகிய எழுவரும் செவ்வாய் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இன்று மார்ஜினல் சாலையில் அமைந்துள்ள குனார்ட் மையத்தில் நடைபெற்ற இறுச்சடங்களிலும் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

சிறுவர்களின் தந்தை இப்ராஹிம் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிர் அபாயம் ஏதும் இல்லை என்றாலும் அவர் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தீ விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை உண்மையான காரணம் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றாலும், அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ளலாம் என உம்மா மசூதி நிர்வாகிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

சிறார்களின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்காக இதுவரை பொதுமக்களிடம் இருந்து சுமார் 575,000 டொலர் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இறுச்சடங்கு நிகழ்வில் Nova Scotia துணை-ஆளுநர் மற்றும் துணை பிரதமர், ஹாலிஃபேக்ஸ் துணை மேயர் மற்றும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers