அனிமேஷன் குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற முதல் பெண்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் டொராண்டோவில் வளர்ந்தவராகிய ஒரு பெண் அனிமேஷன் குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற முதல் பெண் என்னும் பெருமையை பெற்றிருக்கிறார்.

டொராண்டோவைச் சேர்ந்த டோமி ஷீ தனது அனிமேஷன் குறும்படமான Baoக்காக தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

Bao, சீன கனேடிய பெண் ஒருவர் செய்த கொழுக்கட்டை ஒன்று உயிர் பெற்று வருவதைக் குறித்த படமாகும்.

வாழ்க்கையில் தனிமையில் போரடித்து வாழும் ஒரு பெண், அவர் செய்த கொழுக்கட்டை ஒன்று உயிர் பெற மீண்டும் தாய்மையை அனுபவிப்பதைக் குறித்து அந்த 8 நிமிட குறும்படம் கூறுகிறது.


கனடாவைச் சேர்ந்தவர்கள் இயக்கிய Weekends மற்றும் Animal Behaviour என்னும் இரண்டு குறும்படங்களும் கூட போட்டியில் இருந்த நிலையிலும் டோமி ஷீ போட்டியில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்ட டோமி ஷீ, தாங்கள் வரைந்த படங்களுடன் வீட்டுக்குள்ளேயே மறைந்து கொண்டிருக்கும் பெண்கள், உங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல பயப்பட வேண்டாம் என்று கூறினார். ட்விட்டரில் டோமி ஷீக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கனடா சார்பில் ஆஸ்கர் வென்றுள்ள, சீனாவில் பிறந்தவரான ஷீ, இரண்டு வயதாக இருக்கும்போது கனடாவிலுள்ள டொராண்டோவுக்கு தனது குடும்பத்துடன் குடி பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers