இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காக்கவேண்டும்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Report Print Balamanuvelan in கனடா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை உற்று கவனித்து வருவதாக கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமைதி காக்கும்படி இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையேயான முரண்பாடு, அப்பகுதியில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள ட்ரூடோ,பிரச்சினை தொடர்பாக சுமூக தீர்வை எட்டுவதற்காக கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மேலும் தாக்குதல்களில் ஈடுபடாமல் அமைதி காக்கும்படி கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட்ம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர், இந்திய பாகிஸ்தான் பகுதிகளில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தவும், தூதரக பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த முயற்சியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நமது சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து பாடுபட தாங்களும் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து கனடா மிகுந்த கவலைக்குள்ளாகியியிருக்கிறது.

இரண்டு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் மேலும் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கனடா வலியுறுத்துகிறது.

உலகமே கைகோர்த்து தீவிரவாதத்திற்கெதிராக போரிடுவதற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, அதில் தன் நிலைப்பாட்டிலும் கனடா உறுதியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers