இரண்டு வயது குழந்தையின் கணுக்கால்களை உடைத்த தாய்: வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி

Report Print Balamanuvelan in கனடா

இரண்டு வயது குழந்தையின் கணுக்கால்களை உடைத்ததோடு அதற்கான சிகிச்சையும் கொடுக்க தவறிய ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு தாய் தான் சிறு வயதில் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாதிட்டும் அதை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு சிறைத்தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

29 வயதான அந்த பெண் தனது குழந்தையை வார இறுதியில் தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்ற நிலையில், அவர்கள், அந்த குழந்தை நிற்கவோ நடக்கவோ இயலாமல் தடுமாறுவதையும், வலியால் துடித்து அழுவதையும் கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவளது இரண்டு கணுக்கால்களும் உடைந்திருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த குழந்தையின் தாய், தான் சிறு வயதில் பாதிக்கப்பட்டதாகவும், தன் கணவரும்கூட தன்னை மனோரீதியாக துன்புறுத்தியதாகவும் வாதிட்டும் நீதிபதி அதை அதை ஏற்க மறுத்துவிட்டார்.

என்னைப் பொருத்தவரை அந்த பெண்ணிடம் தவறு இருக்கிறது என்று கூறிய நீதிபதி, ஏற்கனவே சில மாதங்கள் முன் அந்த குழந்தையின் கை உடைந்துள்ளதை நினைவு கூர்ந்தார்.

அந்த குழந்தையால் நடக்கவோ நிற்கவோ முடியவில்லை என்பதைக் கண்டிருந்தும், அவள் வலியால் துடிப்பதை அறிந்திருந்தும் அவள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

அத்துடன் அந்த பெண் நடந்தவற்றிற்கு விசாரணையின்போது வருந்தியதாகவும் தெரியவில்லை என்று தெரிவித்த நீதிபதி அவளுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers