கனடாவில் விமானப்பயணிகளுக்கு மீனால் ஏற்பட்ட டென்ஷன்!

Report Print Balamanuvelan in கனடா

கனடா விமானம் ஒன்றில் வான்கூவரிலிருந்து டொராண்டோவிற்கு புறப்பட இருந்த விமானப் பயணிகள் மீனால் டென்ஷனானார்கள்.

விடயம் வேறொன்றுமில்லை, ஒரு பயணி தனக்கு இரவு உணவில் மீன் இல்லை என்று தெரியவர, பயங்கர கலாட்டா செய்திருக்கிறார்.

எனக்கு மாமிசமும் பிடிக்காது, கோதுமையும் பிடிக்காது, மீன் இல்லாமல் என்னால் சாப்பிட முடியாது, என்று கூறி அடம் பிடித்திருக்கிறார் அந்த பயணி.

இதனால் புறப்பட்ட விமானம் மீண்டும் வான்கூவருக்கே திருப்பப்பட்டது. மீன் உணவு கொண்டு வருவார்கள் என்று பார்த்தால், விமான ஊழியர்கள், கலாட்டா செய்த நபரை கையையும் காலையும் பிடித்து தூக்கி விமானத்துக்கு வெளியே விட்டுவிட்டார்கள்.

சரி, அப்புறமாவது விமானம் புறப்படும் என்று பார்த்தால், விமான பணிப்பெண்கள் இனி புறப்பட்டு சென்று விட்டு திரும்பும் முன், அவர்களது ஷிஃப்ட் முடிந்துவிடும்.

எனவே அவர்களுக்கு பதில், அடுத்த ஷிஃப்ட் உள்ள பணிப்பெண்களை அழைத்துக் கொண்டு விமானம் புறப்பட்டது. ஆனால் அதற்குள் ஐந்து மணி நேரம் கூடுதல் ஆகி விட, பயணிகள் பல்லைக் கடித்துக்கொண்டு பயணம் செய்தார்கள், ஏனென்றால், அவர்கள் வேறு ஏதாவது புகார் செய்ய, அவர்களையும் விமானத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டால் என்ன செய்வது?

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்