என் வாழ்வை மாற்றிய இலங்கை! நெகிழும் புகழ் பெற்ற எழுத்தாளர்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாழும் ஒரு பிரபல பத்திரிகையாளர், தான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, இலங்கை எப்படி தனக்குள்ளிருந்த கதாசிரியரை வெளிக்கொணர்ந்தது என்பதை விவரிக்கிறார்.

பிரித்தானியாவில் பிரபல பத்திரிகைகளில் நிருபராகவும், ஆசிரியராகவும் பணி புரிந்து பல விருதுகளுக்கு சொந்தக்காரராக விளங்கிய ஃபியோனா பார்ட்டனும் (62), அவரது கணவரும் நடுத்தர வயதை எட்டியபோது, அவர்களுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றும் விருப்பம் ஏற்பட்டது.

உலகின் பல பகுதிகளுக்கு சென்று அபாயகரமான சூழல்களில் இளம் பத்திரிகையாளர்களுடன் பணிபுரிந்தார்கள் அவர்கள். அப்படித்தான் அவர்கள் இலங்கைக்கும் சென்றார்கள்.

அங்கு ஃபியோனா இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்க, அவரது கணவர் கற்றல் குறைபாடு கொண்ட இலங்கையர்களுக்கு தச்சுத்தொழில் கற்றுக் கொடுத்தார். அப்படியிருக்கும்போது, ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் கதை எழுத முயற்சித்தார் ஃபியோனா.

அதன் விளைவாக The Widow என்னும் கதை பிறந்தது. தன் திருமண வாழ்வில் பல ரகசியங்களைக் கொண்ட ஒரு பெண்ணைக் குறித்த, த்ரில்லர் ரக கதை அது.

அது புத்தக வடிவில் வெளியானபோது, 37 நாடுகளில் பிரமாதமாக விற்பனையாயிற்று. அப்போதுதான் ஃபியோனா தனக்குள் ஒரு சிறந்த கதாசிரியர் இருப்பதை உணர்ந்தார். அது ஏன் இலங்கையில் ஆரம்பித்தது என்று வியக்கும் ஃபியோனாவிடம் தனது கேள்விக்கான பதில் இல்லை.

தான் ஒரு கதாசிரியராவேன் என்னும் நம்பிக்கை தனக்கு அப்போது இருந்ததேயில்லை என்று கூறும் ஃபியோனா, அது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்றுதான் எண்ணினேன், இப்போதோ, நான் ஒரு முழு நேர கதாசிரியராகிவிட்டேன் என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers