விசா புதுப்பிக்க மறுப்பு... அடம்பிடிக்கும் கனடா: முன்னாள் பிரித்தானிய ஒலிம்பிக் வீரருக்கு ஏற்பட்ட துயரம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் கடந்த 11 ஆண்டுகளாக குடியிருந்துவரும் முன்னாள் பிரித்தானிய ஒலிம்பிக் வீரரை கனடா அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற பணித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

கனடாவில் கடந்த 11 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் முன்னாள் ஒலிம்பிக் வீரரான 90 வயது நார்மன் ஹோல்வெல்.

இவர இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் விசா பெற்று வந்த நிலையில், தற்போது கனேடிய நிர்வாகம் நார்மனின் விசாவை புதுப்பிக்க மறுத்துள்ளதுடன், நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், பிரித்தானியாவில் நார்மனுக்கு சொந்தமான குடியிருப்பு ஏதும் இல்லை எனவும், 11 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் பணி நிமித்தம் குடியேறியதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கனடாவில் ஆண்டு தோறும் 1952 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் வீரர்களுக்கு என ஒதுக்கப்படும் குடியிருப்புக்கு பல முறை முயற்சித்தும் அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை என அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கனடா அரசாங்கம் தமது தந்தைக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இதுவரை மறுத்தே வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கனடாவை மட்டுமே நம்பி குடியிருந்து வந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னால், எங்கே நாங்கள் போவது என கேள்வி எழுப்பும் அவர்,

தமது தந்தையை வீடற்றவராக்க கனடா நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஆலிவர் பகுதியில் குடியிருந்துவரும் நார்மன், ஓட்டுநர் உரிமம் மற்றும் வங்கிக்கணக்கும் பெற்றுள்ளார்.

தற்போது நார்மனுக்கு ஆதரவாக 300 பொதுமக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டு கனடா அரசாங்கத்திற்கு மனு அளித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்