எத்தியோப்பிய விமானம் விழுந்து நொறுங்கியதில் பலியான 18 கனேடியர்கள்! பிரதமர் ட்ரூடோ இரங்கல்

Report Print Balamanuvelan in கனடா

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் பயணித்தவர்களில் 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்துள்ள சம்பவம் உலகை உலுக்கியுள்ள நிலையில், அவர்களில் எட்மண்டனைச் சேர்ந்த ஒரு இளம்பெண், அவரது மகள், Carleton பல்கலைக்கழக பேராசிரியர், கால்கரியைச் சேர்ந்த ஒரு அக்கவுண்டண்ட் உட்பட 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்து குறித்து கேள்விப்பட்ட தான், மிகவும் துக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, கனேடியர்கள் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான Pius Adesanmi, நைஜீரியாவில் பிறந்தவரும், Carleton பல்கலைக்கழக பேராசிரியருமாவார்.

எட்மண்டனைச் சேர்ந்த Amina Ibrahim Odowaa (33)வும் அவரது மகளான Sofia Faisal Abdulkadir (5)ம், கென்யாவிலிருக்கும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக பயணம் மேற்கொண்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கல்கரியைச் சேர்ந்த, அக்கவுண்டண்டாக பணியாற்றும் Lwugi உடல் நலமில்லாமல் இருக்கும் தனது தாயை சந்திப்பதற்காக கென்யாவுக்கு புறப்பட்டார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான Danielle Moore (24) நைரோபியில் நடைபெறும் ஐரோப்பிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணம் புறப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers