கனடா எல்லையில் பனியில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப்பெண்: பரிதாப பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

கனடா எல்லையில் நிறைமாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் பனியில் சிக்கித் தவித்தபோது தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து எல்லையைக் கடந்து Manitobaவுக்குள் வந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி, பனியில் சிக்கிக் கொண்டார்.

எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில் இருந்த அந்த 25 வயது பெண், அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்டனர்.

அவர் ரயில் பாதை வழியாக நடந்தே, மின்னசோட்டாவிலிருந்து எல்லையைக் கடந்து கனடாவுக்குள் வந்து விட்டது தெரியவந்தது.

சமீபத்தில் பெய்த பனியில் அந்த இடமே பனியால் மூடப்பட, வெப்பநிலை 20 டிகிரிக்கும் கீழே சென்றது.

கடும் குளிரில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கித் தவித்த அந்த பெண்ணை மீட்ட தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வரும் வரை போர்வைகளால் அவரை மூடி வெதுவெதுப்பாக வைத்துக் கொண்டனர்.

பின்னர் வந்த ஆம்புலன்சில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு இன்னும் குழந்தை பிறக்காத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காரணம், அவர் ஒரு புகலிடக் கோரிக்கையாளர், சட்டவிரோதமாக அவர் கனடாவுக்குள் நுழைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கனடா எல்லை பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கனடா பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers