லாட்டரியில் விழுந்த $1 மில்லியன் பரிசு! ஜாலியாக செலவு செய்ய நினைத்த நேரத்தில் நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நபர் ஒருவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில், பரிசு பணத்தில் பங்கு தராமல் தங்களை அந்த நபர் ஏமாற்றிவிட்டதாக சிலர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள Surrey நகரை சேர்ந்தவர் செங்சவான். இவருக்கு சமீபத்தில் லாட்டரி சீட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

இனி வேலைக்கு செல்லமாட்டேன், இந்த பணத்தை வைத்து பல இடங்களை சுற்றி பார்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வேன் என கூறினார்.

இந்நிலையில் செங்சவானுடன் பணிபுரியும் டிங் ஜூ, ஹாரேட், எல்வுட், ஹோம்சம்பத் ஆகியோர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், நாங்கள் எல்லாம் சேர்ந்து தான் லாட்டரி சீட்டு வாங்கினோம், ஆனால் பரிசு விழுந்த பணத்தில் எங்களுக்கு பங்கு தராமல் அனைத்தையும் அவரே எடுத்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அறிய சில ஊடகங்கள் செங்சவான் வீட்டுக்கு சென்ற நிலையில், அவர் மகன் என கூறிய நபர் இது குறித்து பேசினார்.

என் தந்தை ஊரில் இல்லை, இந்த லாட்டரி சீட்டை என் சகோதரி வாங்கினார், அந்த பரிசு பணத்தை என் தந்தை லாட்டரி நிறுவனத்திடம் சென்று பெற்று கொண்டார் என கூறியுள்ளார்.

ஆனாலும் லாட்டரி சீட்டு வாங்கியவர் தான் பணத்தை பெறவேண்டும் என்ற நிலையில் செங்சவான் பணத்தை பெற்றதும் தவறு என கூறப்படுகிறது.

இது குறித்து லாட்டரி நிறுவனம் கூறுகையில், குழுவாக லாட்டரி சீட்டு வாங்கினால் அவர்களுக்குள் ஒப்பந்தம் போட்டு கொள்ளவேண்டியது அவசியமாகும்.

பரிசு பெறும் போது அதை காட்டினால் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

ஆனால் இந்த விவகாரத்தில் செங்சவான் தங்களது நண்பர் என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் அவருடன் வாய்மொழி ஒப்பந்தம் போட்டதாகவும், எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் போடவில்லை என்றும் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் தன் மீது வழக்கு தொடர்ந்த நண்பர்கள் மீது இதுவரை பதில் வழக்கை செங்சவான் தொடரவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்