கனடாவில் 16 பேரை பலிவாங்கிய கொடூர சாலை விபத்து: சாரதிக்கு அதிகபட்ச தண்டனை அறிவிப்பு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் 16 இளம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், வெள்ளியன்று Melfort பிராந்திய நீதிமன்ற நீதியரசர் Inez Cardinal குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கனடாவின் சாஸ்கடூன் நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொடூர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

கால்கரி பகுதியில் குடியிருக்கும் ஜஸ்கிரட் சிங் சித்து என்ற 30 வயது லொறி சாரதி மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மேலும் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரு தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற ஆபத்தான நிகழ்வுகள் இனி கனடா சாலைகளில் நடைபெறாமல் இருக்க இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவத்தன்று Humboldt Broncos என்ற ஹொக்கி அணியினருடன் புறப்பட்டு சென்ற பேருந்து மீது ஜஸ்கிரட் சிங் சித்துவின் லொறி பலமாக மோதியுள்ளது.

இதில் 16 இளம் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers