கனடா நாடாளுமன்றத்தில் பிரதமர் செய்த தவறான செயல்? கலகலத்த நாடாளுமன்றம்: ஒரு வேடிக்கை செய்தி

Report Print Balamanuvelan in கனடா

நாடாளுமன்றத்தில் சாப்பிட்டதற்காக கனடா பிரதமர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டிய சம்பவத்தால் நாடாளுமன்றமே கலகலத்தது.

கனடா நாடாளுமன்றத்தில், கனடா பிரதமர் bagel எனப்படும் உணவை தனது டெஸ்குக்கு அடியில் ஒளித்து வைத்து சாப்பிட்டதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Scott Reid குற்றம் சாட்டியதையடுத்து, நாடாளுமன்றமே பரபரப்பானது.

சபாநாயகரிடம் குற்றம் சாட்டிய Scott, அவையில் உணவு உண்ணக்கூடாது என்ற விதியை மீறி, பலர் உணவு உண்டதாகவும், அவர்களில் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒருவர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனது டெஸ்கின் அடியில் மறைத்து வைத்து, bagel எனப்படும் உணவை சாப்பிட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் அவையில் பலத்த கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

சபாநாயகரும், பிரதமர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எழுந்திருந்து, மன்னிக்க வேண்டும் சபாநாயகர் அவர்களே, நான் சாப்பிட்டது உண்மைதான், ஆனால் நான் சாப்பிட்டது ஒரு சாக்லேட் பார் , அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூற அவையே கலகலத்தது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers