கனடாவில் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி!

Report Print Raju Raju in கனடா

கனடாவில் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் Nova Scotia மாகாணத்தின் Eastern Passage பகுதியில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.

காரானது விபத்தில் சிக்கிய நிலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் கார் உள்ளே இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றினார்கள்.

தீப்பிடித்து எரிந்த கார் விபத்து நடந்த பகுதி அருகிலேயே நிறுத்தப்பட்டது. காரின் சில பாகங்கள் சம்பவ இடத்திலேயே சிதறி கிடந்தன.

உயிரிழந்தவர்களின் பாலினம் மற்றும் இன்னபிற விபரங்கள் குறித்து இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers