நேரலையில் பாதிரியாரை கத்தியால் குத்திய நபர்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் தேவாலயம் ஒன்றில் நேரலையில் ஆராதனை நடத்திக் கொண்டிருந்த பாதிரியாரை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மாண்ட்ரியலில் அமைந்துள்ள புனித ஜோசப் பேராலயத்தில், Father Claude Grou (77) என்னும் பாதிரியார் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார்.

அந்த ஆராதனை கனடா தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் கத்தியுடன் பாதிரியாரை நெருங்க, அதிர்ந்த பாதிரியார் தனது இருக்கையிலிருந்து பதறி எழுந்தார்.

அந்த நபர் தன்னிடமிருந்த கத்தியால் மாறி மாறி பாதிரியாரைக் குத்தினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வீடியோவை காண

பாதிரியாரை கத்தியால் குத்திய நபரின் பெயர் Vlad Cristian Eremia (26) என்று பின்னர் தெரிய வந்தது.

கத்தியால் குத்திய அந்த நபரை மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Eremiaவுக்கு மன நல பிரச்சினைகள் இருக்குமா என்பதை அறிவதற்காக ஆய்வுகள் மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிரியார் Claude, காயங்கள் பெரிய அளவில் இல்லாததையடுத்து, சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார்.

தன்னை கத்தியால் குத்திய நபர் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என்று கூறியுள்ளார் பாதிரியார் Claude.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்