லண்டனில் குடியிருக்கும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in கனடா

பிரித்தானியாவில் பிரெக்சிற் தொடர்பாக நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பதால் லண்டனில் குடியிருக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட கனேடிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

லண்டனில் அரசு கட்டிடங்களுக்கு அருகாமையில் பிரெக்சிற் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே கனேடிய அரசு, தங்களது குடிமக்களுக்கு குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் வன்முறையில் இறங்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் குறிப்பிட்ட பகுதிகளை கனேடியர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே முன்வைக்கும் உடன்படிக்கையானது மூன்றாவது முறையாகவும் நிராகரிக்கப்பட்ட நிலையில்,

பிரெக்சிற் போராட்டமானது மேலும் பல நாட்கள் நீடிக்கலாம் என கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers