கனடாவை உலுக்கிய நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொலை வழக்கு: தீர்ப்பு எப்போது?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் தனது கணவனாலேயே கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், வரும் மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கனடாவின் பிக்கெரிங் என்ற பகுதியைச் சேர்ந்த Arianna Goberdhan (27), 9 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது தனது கணவனான Nicholas Baig (25)என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சுமார் ஆறு வருடங்கள் காதலித்து பின் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கிடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்திருக்கின்றன.

9 மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவனை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வாழத் தொடங்கியிருக்கிறார் Arianna.

ஒருநாள் தன் பெற்றோரிடம், தான் சென்று தன் கணவனை அலுவலகத்திலிருந்து காரில் அழைத்துச் வரப்போவதாக கூறிச் சென்றிருக்கிறார் Arianna.

அதற்குப்பின் அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை.

Ariannaவுக்கும் Nicholasக்கும் சண்டை ஏற்பட, அவர் உடனடியாக அவசர உதவியை அழைத்திருக்கிறார்.

ஆனால் எதுவும் பேசாமலே Arianna போனை வைத்து விட, அவசர உதவி எண்ணிலிருந்து அவரை திரும்ப அழைத்திருக்கிறார்கள்.

அப்போது, தன் கணவர் சண்டையிடுவதாகவும் பொலிசாரை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார் Arianna.

பொலிசார் வரும்போது இடுப்புக்கு கீழ் உடையின்றி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார் Arianna.

அத்துடன் அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்து விட்டிருக்கிறது.

சமையல் செய்யும் கத்தியால் Ariannaவை முகம், கழுத்து தலை மார்பு என பல இடங்களில் 17 முறை குத்தியிருந்தான் Nicholas.

Nicholasஐ கைது செய்த பொலிசார், அவரை காவலில் வைத்திருந்த நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்தது.

20 ஆண்டுகள் வரை ஜாமீனில் வர முடியாத சிறைத்தண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வக்கீல் நீதிபதியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் வரும் மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த தண்டனை Ariannaவைக் கொன்றதற்காக மட்டுமே, குழந்தையைக் கொன்றதற்காக அல்ல.

எனவே Ariannaவின் பெற்றோர் குழந்தையின் உயிரிழப்புக்கும் தண்டனை அளிக்கப்படும் வகையில் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்