கனடாவில் திரைப்பட பாணியில் நடந்த கோர விபத்து... சுக்கலாக நொறுங்கிய கார்: ஒருவர் பலி

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் Port Credit பகுதியில் நடந்த கோர விபத்தில் சிக்கி, சம்பவயிடத்திலேயே சாரதி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கிய வாகனமானது சுக்கலாக நொறுங்கியதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

லேக்ஷோர் மற்றும் ஸ்டேவ்பேங்க் சாலைகள் சந்திப்பில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

பர்லிங்டன் பகுதியை சேர்ந்தவர் என நம்பப்படும் 38 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மட்டுமே விபத்துக்குள்ளான காரில் இருந்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு மின்கம்பத்தில் மோதி, பின்னர் தடுப்புச் சுவரில் பலமாக மோதியுள்ளது.

இதனிடையே காருக்குள் இருந்த அந்த 38 வயது சாரதி, வெளியே சுமார் 10 மீற்றர் தொலைவில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர், விபத்துக்குள்ளான சாரதியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

ஆனால் காயங்களின் காரணமாக குறித்த நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக பின்னர் தகவல் வெளியானது.

விபத்தில் கார் சுக்கலாக நொறுங்கியதால் அதன் மொடல் தொடர்பில் முதற்கட்டமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனம் கூட இந்த அளவுக்கு சுக்கலாக நொறுங்க வாய்ப்பில்லை என கூறும் அதிகாரிகள்,

கண்மூடித்தனமான வேகமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும், ஆனால் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers