கனடாவில் உயிருக்கு போராடிய நபர் மருத்துவமனையில் இறந்த சோகம்: சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் 41 வயதான குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாறியோ மாகாணத்தின் Thunder Bay நகரில் உள்ள ஒரு இடத்திலிருந்து பொலிசாருக்கு கடந்த வெள்ளிக்கிழமை போன் வந்தது.

அதில் பேசியவர்கள், நபர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ஜெப்ரி மில்லர் (41) என்பவரை பொலிசார் கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இதன்பின்னர் ஜெப்ரி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்