கனடாவில் 5,000 டொலர் வயர்லெஸ் கட்டணம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் தாயார் ஒருவர் வயர்லெஸ் கட்டணமாக 5,000 டொலர் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

எட்மன்டன் பகுதியில் குடியிருக்கும் Gunn-LaBrie என்பவர் தமது மகன் மற்றும் கணவருடன் பேசுவதற்காக வயர்லெஸ் இணைப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களுக்கு அக்டோபர் மாத பாதியில் இருந்து டிசம்பர் மாத துவக்கம் வரையான வயர்லெஸ் கட்டணமாக 6,774 டொலர் செலுத்த வேண்டியதாக வந்துள்ளது.

Gunn-LaBrie-ன் மகன் சுமார் 150 கி.மீ தொலைவில் குடியிருக்கும் தமது காதலியுடன் அதிகமாக பேசியதாலையே இந்த கட்டணம் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வயர்லெஸ் நிற்வாகிகளிடம் முறையிட்ட நிலையில், அவர்கள் முதலில் 521 டொலர் கட்டணம் மொத்த தொகையில் இருந்து கழித்துள்ளனர்.

பின்னர் மேலும் 1,163 டொலர் கட்டணத்தை ரத்து செய்துள்ளனர். இருப்பினும் 5,090 டொலர் தொகை செலுத்த வேண்டிய கண்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த தொகையை தவணைகளில் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Gunn-LaBrie மட்டுமல்ல, கனடாவில் கடந்த சில மாதங்களாக வயர்லெஸ் தொலைபேசிக் கட்டணங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

வயர்லெஸ் வாடிக்கையாளர்களில் 1,152 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், 24 விழுக்காடு வாடிக்கையாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்