சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான கனடா இளம்பெண் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

சில மாதங்களுக்கு முன் சுற்றுலா சென்ற இடத்தில் மர்மமான முறையில் மாயமான கனடாவைச் சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கியூபெக்கைச் சேர்ந்த Edith Blais, இத்தாலியைச் சேர்ந்த Luca Tacchetoவுடன் கடந்த டிசம்பர் மாதம் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள Burkina Fasoவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாயமானார்.

ஜனவரி மாதம் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, Edith உயிருடன் இருப்பதாக நம்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, Edithம் அவரது சக சுற்றுலாப்பயணியும் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆயுதமேந்திய எந்த இஸ்லாமியவாத அமைப்பும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில், Edithம் அவரது சக சுற்றுலாப்பயணியும் கடத்தப்பட்டு மாலிக்கு கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படுவதாக அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாலி பாதுகாப்பு துறையின் பேட்டி ஒன்றை ஆதாரமாக மேற்கோள் காட்டி இந்த தகவலை அந்த மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers