ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்: கனடா பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

ஊழல் புகாரில் சிக்கி தனக்கு அவப்பெயர் வருவதற்கு காரணமாக இருந்த இரண்டு முன்னாள் கேபினட் அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கனடாவில் பெரிதும் பேசப்பட்ட SNC- Lavalin ஊழலில் தொடர்புடைய ஜோடி வில்சன் மற்றும் ஜேன் பில்பாட் ஆகிய இருவரையும் தான் பதவி நீக்கம் செய்துள்ள தகவலை அவர்களுக்கு தெரிவித்துள்ளதாக ட்ரூடோ தெரிவித்தார்.

அத்துடன், அவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இருவருக்கும், நமது அணிக்கும் நடுவில் இருந்த நம்பிக்கை உடைந்து விட்டது என்றார் அவர்.

உரையாடல்களை அனுமதியின்றி ரெக்கார்ட் செய்வதானாலும் சரி, தொடர்ந்து நமது அரசு மீதும், ஒரு தலைவர் என்கிற முறையில் என் மீதும், அவர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதானாலும் சரி, அவர்கள் இருவரும் நம்மோடு இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது என்றார் அவர்.

சுமார் இரண்டு மாதங்களாக இந்த ஊழல் பிரச்சினை நாடளுமன்றத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, பொது மக்கள் மத்தியில் ட்ரூடோ மதிப்பிழப்பதற்கும் காரணமாக அமைந்தது குறிபிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers