கனடாவின் பரபரப்பான சாலையில் பெண்மணிக்கு நேர்ந்த துயரம்: ரத்த வெள்ளத்தில் மீட்பு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் சாலையில் நடந்து சென்ற டொராண்டோ பெண்மணி ஒருவர் வாகனம் மோதி பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒன்ராரியோ மாகாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளியன்று இரவு மார்க்கம் சாலையில் இருவாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று மோதியதில் 31 வயதான டொராண்டோ பெண்மணி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சுமார் 11.15 மணியளவில் தகவலறிந்து அவசர உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார் விரைந்து வந்துள்ளனர்.

குறித்த மோதல் சம்பவத்தை அடுத்து இரு வாகன சாரதிகளையும் பொலிசார் விசாரித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் காட்சிகளை எவரேனும் வீடியோ பதிவு செய்திருந்தால் பொலிசாருக்கு தந்து உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அந்த காட்சிகள் உதவும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இது திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers