சூட்கேசுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவரின் பிணம்: நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in கனடா

பிரபல மருத்துவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்து சூட்கேசுக்குள் அடைத்து கனடாவின் நதி ஒன்றில் வீசியதற்காக தண்டனை வழங்கப்பட உள்ளது.

Elana Fric-Shamji என்னும் பிரபல மருத்துவரின் உடல் வழிப்போக்கர்களால் ஹம்பர் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்த Elanaவின் கணவரான Mohammed Shamjiயை சாதாரண உடையிலிருந்த பொலிசார் கைது செய்தனர்.

வெவ்வேறு நபர்களைக் காதலித்து, பின்னர் பிரிந்த Elanaவும் பிரபல நரம்பியல் சிகிச்சை வல்லுநரான Shamjiயும் காதலித்தனர். விளைவு Elana கர்ப்பமானார்.

தீவிர இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட Shamji வேறு வழியின்றி Elanaவை மணந்து கொண்டார்.

வெளி உலகுக்கு இரண்டு பிரபல மருத்துவர்கள் இணைந்து வாழ்வதுபோல் தெரிந்தாலும், திருமண வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள்.

முந்தைய காதல்களின் தாக்கம், திருமணத்தின் விளைவுகள், குழந்தைகள் என குழப்பமாக தொடர்ந்தது வாழ்க்கை.

12 ஆண்டுகள் தாக்குப்பிடித்த Elana, புதிய ஒரு உறவைத் தேடிக் கொண்டார். அது Shamjiக்கு அதிர்ச்சியளித்தது. விவாகரத்து கோரினார் Elana. அதை தாங்கும் பக்குவம் Shamjiக்கு இல்லை.

ஒருநாள் பக்குவமாக பேசி தனது படுக்கையறைக்கு Elanaவை அழைத்த Shamji, அவரை அடித்து, கழுத்தை நெறித்துக் கொன்று சூட்கேஸ் ஒன்றினுள் அடைத்து ஹம்பர் நதியில் கொண்டு வீசி விட்டு வந்து விட்டார்.

ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளை அறிந்திருந்த Elanaவின் பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் Shamji.

தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று, தான் Elanaவை கொலை செய்ததை Shamji ஒப்புக் கொண்டார். அடுத்த மாதம் அவரது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers