பள்ளி இறுதி நடன நிகழ்ச்சிக்காக இளைஞர் செய்துள்ள துணிகர செயல்: ஒரு வேடிக்கை வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

தனது பள்ளி இறுதி நடன நிகழ்ச்சியில் தனது ஜோடியாக வரும்படி பிரபல நடிகை ஒருவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர்.

டொரண்டோவில் வாழும் இளைஞரான கிஷோர் தவநீதன், Prom எனப்படும் தனது பள்ளி இறுதி நடன நிகழ்ச்சிக்காக பிரபல கனடா நடிகையான நினா டோப்ரெவ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபல நடிகை ஒருவரை தனக்கு ஜோடியாக வரும்படி அழைப்பு விடுத்துள்ள தவநீதன், அதை வித்தியாசமாக செய்துள்ளார்.

நடனம், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவரான அவர் தனது அழைப்பையே ஒரு நடன வீடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலப்பாடல்களுக்கு பின்னணி நாட்டியப்பெண்களுடன் நடனமாடும் தவநீதன், அந்த வீடியோவிலேயே தனக்கு ஜோடியாக வரும்படி நடிகை நினாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை நினாவிடமிருந்து தவநீதனுக்கு பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்