நியூசிலாந்து தாக்குதலின் தாக்கம்: தற்காப்புக்கலை கற்றுக் கொள்ளும் இஸ்லாமிய பெண்கள்!

Report Print Balamanuvelan in கனடா

நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதலின் தாக்கம் தீராத நிலையில், கனடாவின் இஸ்லாமிய பெண்கள் பலரும் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒண்டாரியோவின் Oakvilleயில் உள்ள உள்ளூர் மசூதி ஒன்று வெளியே இருந்து பார்ப்பதற்கு அமைதியாக இருப்பதுபோல்தான் தெரிகிறது.

ஆனால் அதற்கு உள்ளே பல விடயங்கள் நடந்து கொண்டிருகின்றன.

அந்த மசூதிக்கு தொடர்ந்து வரும் ஜசீனாவுக்கு நியூசிலாந்து தாக்குதலுக்குப்பின் சில வித்தியாசமான எண்ணங்கள் தோன்றி மறைகின்றன.

அதே தாக்குதல் இந்த மசூதியில் நடந்தால் என்ன ஆகும், ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் வேறு நாம் இருக்கிறோம், இந்த பிள்ளைகள் தாக்குதலை எப்படி எதிர்கொள்வார்கள் என்றெல்லாம் எண்ணங்கள் ஓடுகின்றன அவர் மனதில்.

இதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என தான் சிந்தித்ததாக தெரிவிக்கிறார் ஜசீனா. மற்ற பெரும்பாலான பிள்ளைகளைப்போலவே உடற்பயிற்சிக்காகத்தான் இந்த தற்காப்புக் கலை வகுப்புகளில் சேர்ந்ததாக தெரிவிக்கும் ஜசீனா, இஸ்லாமியர்கள் மீதான தாகுதல்கள் குறித்த செய்திகள் தனக்கு இன்னொரு நோக்கத்தையும் கொடுத்ததாக தெரிவிக்கிறார்.

பல நேரங்களில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது என்று கூறும் ஜசீனா, அதனால்தான் இந்த வகுப்புகள் எதற்கும் தயாராக இருக்கும் வகையில் தனக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தந்ததைக் குறித்து மகிழ்ச்சியுறுவதாக தெரிவிக்கிறார்.

ஜசீனாவைப் போலவே, நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்குப்பின் டொராண்டோவின் டானியா குல்ஸார், தானும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிவிக்கிறார்.

தனது பிள்ளைகள் இருவரும் தன்னை தற்காப்புக்கலை வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கிறார் அவர்.

பெரும்பாலானோர் அமைதியாக இருப்பதற்காக மசூதிக்கு செல்கிறார்கள்.

அங்கேயே தாக்குதல் நடக்கும் என்றால், அது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எதற்கும் நாம் தயாராக இருப்பது நல்லதுதானே என்கிறார் குல்ஸார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்