பெண்ணின் உள்ளாடைகள் வைத்திருந்த ஷெல்பில் திருடிய நபர்: அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

சுற்றுலா சென்றிருந்த கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்காக வைத்து விட்டு சென்ற பணத்தை செக்யூரிட்டி ஒருவர் திருடுவதை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

வான்கூவரைச் சேர்ந்த Queen Throngkumpol என்னும் பெண் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா செல்லும் முன், தன் வீட்டில் வேலைக்கு வரும் ஒரு பெண்ணுக்கான சம்பளப்பணத்தை தனது உள்ளாடைகள் வைக்கும் ஷெல்பில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

அங்கு யாரும் தேட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பணத்தை மறைத்து வைத்து விட்டு, தனது வேலையாளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு செய்தி அனுப்பியுள்ளார் Throngkumpol.

பின்னர் அவர் வீட்டில் வேலை செய்யும் அந்த பெண், நீங்கள் சொன்ன இடத்தில் தேடிப்பார்த்தேன், அங்கு பணம் இல்லை, சரியாக எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா என்று செய்தி அனுப்பியுள்ளார்.

தனது உடைகள் வைத்துள்ள அறையில் விலை மதிப்பு மிக்க பொருட்கள் பலவற்றை வைத்துள்ளதால், அங்கு CCTV கெமரா ஒன்றை பொருத்தியுள்ள Throngkumpol, அதை தனது கணினியுடன் இணைத்து வைத்துள்ளார்.

கெமராவில் பதிவான காட்சிகளை சோதித்துப் பார்த்த Throngkumpolக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

செக்யூரிட்டிக்கான சீருடை அணிந்த ஒரு நபர் Throngkumpolஇன் வீட்டுக்குள் நுழைந்து, கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு ஒவ்வொரு இடமாக ஏதாவது கிடைக்குமா என தேடுவது அந்த வீடியோ காட்சிகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் Throngkumpolஇன் உள்ளாடைகள் வைத்திருந்த ஷெல்பை திறக்கும் அந்த நபர், பணம் வைத்திருந்த கவரை எடுத்து தனது பாக்கெட்டில் வைக்கிறார்.

வீடியோவைக் கண்டு அதிர்ந்த Throngkumpol, உடனடியாக அதை பொலிசாருக்கு அனுப்பியிருக்கிறார்.

பொலிசார் அந்த செக்யூரிட்டி நிறுவனத்தை அணுகி அங்கு பணிபுரிந்த 48 வயதுடைய, குறிப்பிட்ட நபரை கைது செய்துள்ளனர்.

அந்த செக்யூரிட்டி நிறுவனம் அந்த நபர் எடுத்த பணத்தை Throngkumpolக்கு திருப்பி அளித்ததோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.

என்றாலும் ஒரு செக்யூரிட்டியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதால், பாதுகாப்பற்ற ஒரு சூழலை தான் உணர்வதாகவும், அச்சத்திலிருப்பதாகவும் Throngkumpol தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்