காது குத்தும் பிரச்சினைக்காக வேலையை விட்ட இளம்பெண்: மனதை மாற்றிய நிகழ்வு!

Report Print Balamanuvelan in கனடா

காது குத்துவதற்காக குழந்தைகளை பெற்றோர் அழைத்து வரும்போது அந்த பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக காது குத்துவதில்லை என ஒரு இளம்பெண் முடிவெடுத்த தருணத்தையும் பின் விளைவுகளையும் விளக்குகிறது இந்த செய்தி.

ஆல்பர்ட்டாவிலுள்ள புகழ் பெற்ற அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார் Raylene Marks.

ஒரு பெண் தன் மகளுக்கு காது குத்துவதற்காக அவளை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

Raylene அந்த குழந்தைக்கு காது குத்துவதற்காக அவளை நெருங்க, அந்த சிறுமி அழுது கலாட்டா செய்திருக்கிறாள்.

எனது உடலை எனது அனுமதியின்றி தொடுவது எனக்கு பிடிக்கவில்லை என்பது போல் இருந்திருக்கிறது அவள் நடந்து கொண்ட விதம்.

அரை மணி நேரம் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பின் அந்த சிறுமியின் தாய், காது குத்த வேண்டாம் என்று அவளை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால் அந்த அழகு நிலையத்தின் மேலாளரோ, Raylene செய்தது தவறு என்றும், கட்டாயப்படுத்தி அந்த சிறுமியைப் பிடித்து காது குத்தியிருக்க வேண்டும் என சத்தம் போட்டிருக்கிறார்.

குழந்தை மறுத்தாலும் கட்டாயப்படுத்தி காது குத்துவதுதான் நமது நிறுவனத்தின் கொள்கை என்றும் மறுக்கும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூற, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, Raylene தனது வேலையை விட்டு நின்றிருக்கிறார்.

பின்னர் நடந்த இந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் Raylene.

அந்த பதிவு வைரலாகவே, Raylene வேலை செய்த நிறுவனம், அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காது குத்த ஊழியர்கள் மறுக்கலாம் என்றும், ஏற்கனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், வாடிகையாளர் நலமே நமது குறிக்கோள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers