கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள தேவாலயம் ஒன்றில் திடீரென ஒருவர் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானதோடு இன்னொருவர் காயமடைந்தார்.

வான்கூவரிலுள்ள தேவாலயம் ஒன்றில் நுழைந்த 25 வயதுள்ள ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் Gordon Parmenter என்பவர் உயிரிழந்தார்.

காலை 10.30 மணியளவில் தேவாலயத்திற்குள் நுழைந்த அந்த நபர் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

தேவாலயத்தில் இருந்த பலர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து அவர் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்ததோடு, அவரை பொலிசார் வரும்வரை பிடித்து வைத்திருக்கின்றனர்.

அந்த நபர் சுட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு இன்னொருவர் காயமடைந்திருக்கிறார்.

காயமடைந்த அந்த நபர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, அத்துடன் அவரால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துப்பாக்கியால் சுட்டவர், துப்பாக்கியால் சுடப்பட்டவர்களில் ஒருவருக்கு அறிமுகமானவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இது மதவெறி தொடர்பில் நடத்தப்பட்ட தாக்குதலும் அல்ல என்று தெரிவித்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers