தபால்காரர் கொண்டு வந்த பார்சலை வாங்க கதவைத் திறந்த பெண்: நடந்த சோகம்!

Report Print Balamanuvelan in கனடா

தபால்காரர் வந்திருப்பதாக எண்ணி பார்சலை வாங்க கதவைத் திறந்த பெண் மீது திடீரென ஒரு அம்பு பாய உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒண்டாரியோவில் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ஒருவர் கதவைத் தட்ட, அந்த வீட்டில் வசிக்கும் 44 வயது பெண் கதவைத் திறந்திருக்கிறார்.

எதிர்பாராத நேரத்தில் அந்த நபர் தனது கையில் வைத்திருந்த பெட்டிக்கடியில் மறைத்து வைத்திருந்த வில் அம்பினால் அவரைத் தாக்கியிருக்கிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சையின் பலனாக பிழைத்துக் கொண்டார்.

CCTV கெமரா காட்சிகளை வெளியிட்டு, பொது மக்கள் உதவியுடன் பொலிசார் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.

அந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட, தனிப்பட்ட தாக்குதல் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை முயற்சி தாக்குதலாக வழக்கை பதிவு செய்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்